பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், பிஎஸ்எல் (PSL) தொடரில் தனது பேட்டிங் அதிரடியால் ஸ்கோர் போர்டை அதிரவைப்பதை விட, தற்போது தனது ஒரு விசித்திரமான செயலால் சமூக வலைதளங்களில் ‘மீம் மெட்டீரியலாக’ மாறியுள்ளார்.
பெஷாவர் சல்மி அணியின் கேப்டனான பாபர், ஆட்ட இடைவேளையின் போது எலக்ட்ரோலைட் பானம் அருந்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பாட்டிலின் விளிம்பில் அவர் காட்டிய விசித்திரமான நாக்கு அசைவுதான் நெட்டிசன்களின் கண்ணில் சிக்கியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள், பாபரின் இந்தச் செயலை பிரபல ‘தி பாய்ஸ்’ தொடரில் வரும் ஹோம்லேண்டர் கதாபாத்திரம் பால் பாட்டிலை நக்கும் காட்சியோடு ஒப்பிட்டு இணையத்தையே சிரிப்பலையில் நனைய வைத்துள்ளனர்.
View this post on Instagram
“>
மறுபுறம், ஒரு சிறிய விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிதாக்குகிறீர்கள் என பாபரின் தீவிர ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். களத்தில் ஸ்பைடர் கேமராவைப் பார்த்து ஓவர் ஆக ரியாக்ட் செய்ததற்காக ஏற்கனவே கிண்டலுக்குள்ளான பாபருக்கு, இந்த வீடியோ அடுத்த கட்டத் தலைவலியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
இணையத்தில் இத்தனை கிண்டல்கள் ஒருபுறமிருக்க, பாபர் தனது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் செம ‘ஃபார்மில்’ இருக்கிறார். அவரது தலைமையிலான பெஷாவர் சல்மி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கெத்து காட்டி வருகிறது.
கிண்டல் செய்பவர்களுக்குத் தனது பேட்டின் மூலம் பாபர் பதிலடி கொடுத்தாலும், இந்த ‘நாக்கு அசைவு’ வீடியோ மட்டும் இப்போதைக்கு ஓயாது போல என கிரிக்கெட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
