மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் (Convoy) எண்ணிக்கையை அதிரடியாக 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார். சிக்கன நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, இனி அவரது கான்வாயில் பாதி அளவிலான வாகனங்கள் மட்டுமே இடம்பெறும். மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தனது கான்வாயில் கூடுதல் எலெக்ட்ரிக் கார்களைப் (Electric Vehicles) பயன்படுத்தவும் அவர் யோசனை வழங்கியுள்ளார்.
அதே சமயம், இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்கள் எதையும் விலைக்கு வாங்க வேண்டாம் என்றும், இருக்கும் வசதிகளைக் கொண்டே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பிரதமரின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, மற்ற அமைச்சகங்கள் மற்றும் மாநில முதல்வர்களும் இதே போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதார நலனுக்காகத் தனது சொந்தப் பாதுகாப்புக் குழுவிலேயே மாற்றங்களைச் செய்த பிரதமரின் இந்தச் செயல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
