சென்னை திருமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த புகாரின் பேரில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் பயணித்த காரில் ரஷித் என்பவர் டிரைவர் ஆக இருந்தார். இந்த காரில் கஞ்சா இருப்பதாக சுட்டிக்காட்டிய தகவலையடுத்து, போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்டனர்.

சோதனையின் போது, காரில் 15 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் ரகுமானிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பதில்கள் முன் பின் முரணாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதோடு காரையும் கைப்பற்றினர். அப்துல் ரகுமானும், ரஷீதும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.