முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஷாநவாஸ் உசேனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறிய அளவிலான மாரடைப்பு தான் என தெரிவித்துள்ளனர். பீகாரை சேர்ந்த 54 வயதான ஷாநவாஸ் உசேன் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் இருந்தார்.