தமிழகத்தில் நிலவும் தொங்கு சட்டமன்ற சூழலில், தவெக-விற்கு திமுக கூட்டணி ஆதரவு அளிக்காவிட்டால், அவர்கள் அதிமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு சிபிஎம் தலைவர் சண்முகம் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “தமிழகத்தில் மீண்டும் பாஜக அல்லது அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இதன் மூலம், தவெக ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், வகுப்புவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

​ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தால், அது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து ‘நல்ல முடிவை’ எடுக்கும் என்று சண்முகம் மர்மமாகத் தெரிவித்தார். அதாவது, விஜய்யின் தவெக-விற்குத் தார்மீக ஆதரவு வழங்கி அதிமுக-வை அதிகாரத்திற்கு வராமல் தடுக்கும் திட்டம் இடதுசாரிகளிடம் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். “கட்சியின் முடிவே இறுதியானது” என்று அவர் கூறியிருப்பது, தவெக-வுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்புள்ளதையே காட்டுகிறது.