தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள விஜய், தனது முதல் கோப்பில் எந்தத் திட்டத்திற்காகக் கையெழுத்திடுவார் என்பதுதான் தற்போது தமிழகத்தின் ‘ஹாட்’ டாபிக். தவெக-வின் இந்த மாபெரும் வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் முக்கியக் காரணமாக இருந்ததால், அவர்களைக் கவரும் விதமான அறிவிப்புதான் முதல் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அவர் முதலில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

​மற்றொரு புறம், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட திருமண உதவித் திட்டமான “ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை” வழங்கும் திட்டத்திற்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. விஜய்யின் முதல் கையெழுத்து ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும் என்பதில் அவரது கட்சி நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். பதவியேற்பு விழா முடிந்த கையோடு, கோட்டைக்குச் சென்று விஜய் போடப்போகும் அந்த முதல் கையெழுத்தைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.