அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய நிலையில் அவை தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக தற்காலிக அவை தலைவராக கேபி முனுசாமி எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்பி தம்பிதுரையிடம் ஆட்சியில் பங்கு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கண்டிப்பாக ஆட்சியில் யாருக்கும் பங்கு கொடுக்க மாட்டோம் அதிமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் இது தொடர்பான அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் என்றும் கூறினார்.