வாட்ஸ் அப் லிங்க் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று பாஜக மோசடி செய்வதாக நெல்லை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு வாக்களித்தால் வாட்ஸ்அப் லிங்க் மூலமாக 500 ரூபாய் கிடைக்கும் என குறுஞ்செய்தி அனுப்புவதாக குற்றம் சாட்டிய திமுக, இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளது.