முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.கே சின்னசாமி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர் இன் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான இவர் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.