தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் மூலமாக மலிவு வெளியில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ,கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைத்தது. இதனால் புதிதாக திருமணம் முடிந்தவர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவை மாற்ற விண்ணப்பித்தவர்கள், ரேஷன் கார்டு தொலைந்து விட்டதால் விண்ணப்பித்தவர்கள் ஆகியோர் சிரமத்தில் இருந்தனர். கடந்த வாரம் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய ரேஷன் கார்டு வழங்க முடியாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.