பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது. அவரிடம் அசையும் சொத்துக்கள் 36 லட்சமும், அசையா சொத்து 1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், 53 லட்சம் அசையா சொத்துக்களும் உள்ளன. தமது பெயரில் கடன்கள் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.