மகாராஷ்டிராவில் கணவனைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பிச் சென்ற மனைவியின் அதிர்ச்சிகரமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.

மேலும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து, அதில் கணவனுக்கு வழங்கப்பட்ட மதுவில் விஷத்தைக் கலந்து கொடுத்து அவரைக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க, உடலை ஒரு கால்வாயில் வீசிவிட்டு இருவரும் தப்பியோடினர்.

இதனால் கணவன் காணாமல் போனது குறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் எட்டு நாட்களுக்குப் பிறகு கால்வாயில் இருந்து உடல் மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் மனைவியின் கள்ளத்தொடர்பு மற்றும் கொலைத் திட்டம் அம்பலமானது.

இந்நிலையில் 10 ஆண்டுகால இல்லற வாழ்க்கையைச் சீரழித்து, காதலுக்காகக் கணவனைக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.