
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.. மாரி மாதா என்ற பெயருடைய அந்தக் கோவிலுக்கு இந்து சமூகத்தினர் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்ய இந்து சமூகத்தினர் கோவிலுக்கு சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இரவு மின்சாரம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் புல்டோசர்கள் கொண்டு கோவிலை இடித்துள்ளனர். இது குறித்து சமூக உறுப்பினர் ஒருவர் கூறுகையில் “கோவில் வேறொருவருக்கு 23 கோடி பாகிஸ்தான் கரன்சிக்கு விற்பனை செய்ய ஆலோசிக்கப்பட்டு வந்துள்ளது. கோவிலை இடித்துவிட்டு அங்கு வர்த்தக கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளனர்” என தெரிவித்தார்.