பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் மேற்கொண்ட வினோதமான வார்ம்-அப் (Warm-up) பயிற்சியை, இந்திய வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் கிண்டல் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டி ஒன்றிற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் வினோதமான முறையில் கால்களை அகட்டி வைத்துக்கொண்டு ஒரு பயிற்சியை மேற்கொண்டனர். இந்தப் பயிற்சியின் நோக்கம் என்னவென்று புரியாமல் சமூக வலைதளங்களில் பலரும் இதைக் கிண்டல் செய்து வந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Deepak Chaahar (@deepak_chahar9)

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தனது சகோதரர் ராகுல் சாஹர் மற்றும் உள்நாட்டு வீரர் கார்த்திக் சர்மா ஆகியோருடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த அதே வினோத பயிற்சியை இவர்களும் செய்து காட்டியுள்ளனர். ‘இனிமேல் இதுதான் எங்களுடைய வார்ம்-அப்’ என்ற வாசகத்துடன், பின்னணியில் நகைச்சுவையான பாடலை ஒலிக்கச் செய்து இந்த வீடியோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

வீடியோவின் இறுதியில் தீபக் சாஹர் தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து நடந்து செல்வது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி, பெங்களூரு எஃப்சி (Bengaluru FC) கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து மற்றும் அவரது சக வீரர்களும் இதே பாணியில் வீடியோ வெளியிட்டு பாகிஸ்தான் வீரர்களைக் கிண்டல் செய்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by GSS (@gkgurpreet)

இன்று (பிப்ரவரி 7, சனிக்கிழமை) தொடங்கும் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது. குரூப்-ஏ பிரிவில் உள்ள அந்த அணி, தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் இந்தியா, அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.