பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பொருளாதார சீரழிவு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமராக நான் பதவியில் இருந்த மூன்று ஆட்சிக் காலங்களில் ராணுவத்தினரின் தலையிட்டால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

இந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சீரழிய இந்தியா காரணம் அல்ல ஏன் ஆப்கான் அமெரிக்கா கூட காரணம் அல்ல. நாம் தான் நமது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டோம். மக்களால் 2018 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை மாற்றிவிட்டு ராணுவம் தங்கள் சொல் கேட்கும் ஒரு அரசை கொண்டு வந்தது.

ராணுவம் அரசியல் சாசனத்தை மீறிய போது நீதிபதிகள் அதனைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமரை பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் கொடுத்தனர். பார்லிமென்டை கலைக்கவும் ஒப்புதல் அளித்தனர். இதனால் தான் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்” என கூறியுள்ளார்.