பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், பிராந்திய அமைதி மற்றும் விளையாட்டுத் திறனை வலியுறுத்தும் வகையில் கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐதராபாத் கிங்ஸ்மேன் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன்னதாக இந்த சங்கம் நடைபெற்றது. டாஸ் போடப்படுவதற்குச் சற்று முன்பாக, பெஷாவர் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஐதராபாத் அணியின் கேப்டன் மார்னஸ் லபுஷேன் மற்றும் பிஎஸ்எல் தலைமை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் இணைந்து வானில் வெள்ளைப்புறாவை பறக்கவிட்டனர்.
PAKISTAN – A PEACE MAKER 🌍🇵🇰
During a PSL 2026 match, Marnus Labuschagne, Babar Azam, and the PSL CEO released a white dove, symbolizing Pakistan’s commitment to peace.pic.twitter.com/LvG37vFfj7
— junaiz (@11junaidali) April 8, 2026
அமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஒரு அமைதி காக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் சக்தியாகச் செயல்படுவதை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்தச் சைகை அமைந்திருந்தது. பிஎஸ்எல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கராச்சியில் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச வீரர்களின் பங்கேற்புடன் இந்த அமைதிச் செய்தி பகிரப்பட்டுள்ளது. விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல, அது நாடுகளை இணைக்கும் ஒரு பாலம் என்பதையும், பிராந்திய நிலைத்தன்மையை விரும்புவதையும் இந்த நிகழ்வு சுட்டிக்காட்டியுள்ளது.
