அமெரிக்கப் பெண் ஒருவர் பாகிஸ்தான் கிராமத்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள எளிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் என்ற பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய அவர், தனது அன்றாட வாழ்க்கை முறையை ‘taylorinpakistan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் தனது கணவருடன் இருக்கும் காட்சிகளைப் பதிவிட்டுள்ளார். அதில் பழமையான வீடுகள், கழிவறை, வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பறவைகள்
ஆகியவற்றை எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்டியுள்ளார்.
“நான் பாகிஸ்தானுக்கு வருவேன் என்று நினைத்ததே இல்லை. ஆனால் இங்குள்ள வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ 88 லட்சம் (8.8 Million) பார்வைகளைப் பெற்று வைரலானது.
இருப்பினும், இந்த வீடியோ இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு பயனர், “சொர்க்கத்திலிருந்து நரகத்திற்குச் சென்றுவிட்டீர்கள்” என எதிர்மறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞரே ஆச்சரியத்துடன் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதில், “நானே பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான். அமெரிக்க வாழ்க்கையைத் துறந்துவிட்டு, லாகூர் அல்லது இஸ்லாமாபாத் போன்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்காமல், அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு கிராமத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தச் சூழலில் உங்களால் எப்படி நிம்மதியாக வாழ முடிகிறது?” எனத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
மேலும் கலாச்சார மாற்றங்களையும், எளிய வாழ்க்கையின் மேன்மையையும் எடுத்துரைக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
