மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு கத்தார் நாடு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘விசா ஆன் அரைவல்’ (Visa-on-arrival) வசதியை கத்தார் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா மோதலில் தானாக முன்வந்து மத்தியஸ்தம் செய்ய முயன்ற பாகிஸ்தானுக்கு, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கத்தார் கதவுகளை மூடியுள்ளது.
இனி பாகிஸ்தானியர்கள் கத்தாருக்குள் நுழைய வேண்டுமென்றால், பயணத்திற்கு முன்பே ‘ஹய்யா போர்ட்டல்’ (Hayya Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முறையான விசா இல்லாமல் விமான நிலையத்தில் இறங்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே சமயம் இந்தியாவிற்கு கத்தார் அரசு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பு அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாக, இந்தியர்களுக்கு 30 நாட்கள் இலவச ‘விசா ஆன் அரைவல்’ வசதி தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 28 முதல் இந்தியர்களுக்கான விசா காலத்தை தானாகவே மேலும் 30 நாட்கள் நீட்டிக்கும் சலுகையையும் கத்தார் வழங்கியுள்ளது.
சர்வதேச அரங்கில் இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக காட்டிக்கொள்ள முயன்ற பாகிஸ்தானுக்கு, கத்தாரின் இந்த முடிவு பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அசைக்க முடியாத பலத்தையும், பாகிஸ்தானின் சர்வதேச நற்பெயர் சரிந்துள்ளதையும் இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
