ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம் தொடருமா அல்லது புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஊழியர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து உள்ள நிலையில் இரண்டு மாநிலங்களிலும் தேசிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இரண்டு மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இது பெரிய சிக்கலான விஷயமாக மாறியுள்ளது. அரசு அவர்களுக்கு எதிராக இருந்தால் பெரிய பிரச்சனை எழும் என ஊழியர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர்.