உத்தரபிரதேச மாநிலம், பாரபங்கியில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பட்டாசு வெடித்தும், டிஜே இசையுடன் சாலை மறியல் செய்து  திருமண ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருமண ஊர்வலம் நடத்தியதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை  சரி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் IPC இன் பிரிவுகள் 268, 188, 341 மற்றும் 7 CLA சட்டத்தின் கீழ் பட்டாசு வெடித்தவார்கள், DJ ஆபரேட்டர், திருமண வீட்டார் என பலர்  மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் திருமண விருந்தினர்கள். ஊர்வலங்கள் மற்றும் சாலை மறியலின் போது பட்டாசு வெடித்தல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் போது இரவு 11.30 மணிக்குப் பிறகு டிஜே இசை போன்றவற்றை ஒலிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை இது போன்ற செயல்கள் மீறுவதாகவும்  காவல்துறை வலியுறுத்தியுள்ளது. CLA சட்டத்தின் கீழ், குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் ஜாமீன் இல்லாமல் ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.