பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான ஒரு உலகளாவிய செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு வரைவு தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பை ஏற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி தற்போது உலகில் சுமார் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடியினர் உள்ளனர்.

அவர்கள் 7000 மொழிகளை பேசுபவர்கள் ஆகவும் 500 வெவ்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பழங்குடியின மக்களின் ஆயுட்காலம் ஆனது இதர பொது மக்களை விட 20 ஆண்டுகள் குறைவாகத்தான் உள்ளது. பழங்குடியின மக்களின் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் அவற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்ப செய்வதற்குமான நெறிமுறை தரவுகளின் தொகுப்பை உருவாக்குமாறு 194 உறுப்பினர் நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.