கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி உருவாக்கப்பட்ட போது ஒரு நட்பு ரீதியான இணைப்பை கொண்டாடுவதற்காக ரயில் ஒன்றை உருவாக்கினார்கள். அதன்படி கடந்த 1930 ஆம் ஆண்டு ஒரு நீராவி என்ஜின் ரயில் உருவாக்கப்பட்டது. இது பேரரசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரி பகுதியில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் கனடா மற்றும் அமெரிக்கா வழியாக மெக்சிகோவை சென்றடைய இருந்தது. அதன்பின் கனடாவுக்கு சென்று அங்கு ஜூலை மாதம் ஓய்வு பெற இருக்கிறது.

அதன்படி நேற்றைய தன்னுடைய பயணத்தை மெக்சிகோவில் நிறைவு செய்ய இருந்த நிலையில் ஒரு விபரீதம் அரங்கேறியது. அதாவது இந்த ரயில் மெக்சிகோ நகரில் நுழைய இருந்தது. அப்போது ஹிடால்கோ என்ற பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரயிலின் முன்பு செல்பி எடுப்பதற்காக நின்றனர். அங்கு ஒரு பெண் தன் மகனுடன் சென்றிருந்த நிலையில் அவர் தண்டவாளம் அருகே முட்டி போட்டு செல்பி எடுக்க நின்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் எஞ்சின் அந்த பெண்ணின் தலையில் மோதியது. இதில் அந்தப் பெண் துணி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.