சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன் சார் கல்வி’ (Skill Education) இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் இனி இந்தப் பாடத்திற்கும் அளிக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு (AI), கோடிங் (Coding), கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட நவீன மற்றும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

​இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஆசிரியர்களுக்கும் பிரத்யேகப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், தொழில்முறைத் திறன்களைப் பள்ளிக் காலத்திலேயே வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வத்தையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.