தமிழகத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களுக்கு உதவும் விதமாக பள்ளி கல்வித்துறை உடன் இணைந்து அரசு பல நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. அதன்படி இலவச மிதிவண்டி திட்டத்தில் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உதவும் விதமாக மிதிவண்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
ஆனால் இதனைப் பெற்று மாணவர்கள் பணத்திற்கு விற்று விடுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை மாணவர்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். அதன் பயன் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
