தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை  விரிவுபடுத்த தமிழக அரசானது முடிவு செய்திருக்கிறது.

அதனபடி நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமாக நகர பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்படும் விதமாக தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.