புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு உதவி தொகையை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அதில் பள்ளி மாணவர்கள் உதவித்தொகையை பெறுவதற்கு அந்தந்த பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஆசிரியரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் எனவும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரம் பட்டியலை தெளிவாக தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.