மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிகப் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிபாஷா குமார் என்ற 40 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் அதே பள்ளியில் படித்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவனை அவர் காதலித்ததோடு பல சொகுசு ஹோட்டல்களுக்கு மாணவனை அழைத்துச் சென்று மாத்திரைகளை ஜூஸில் கலந்து கொடுத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவன் பள்ளியை விட்டு நின்ற போதும் தொடர்ந்து ஆசிரியை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
இதன் காரணமாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த மனுவில் மாணவன் தான் தன்னை கண்மூடித்தனமாக காதலித்ததாகவும், அந்த மாணவன் தன்னை மாணவி என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த மாணவனிடம் பெற்றோர் சம்மதித்தால் தான் உன்னை சந்திப்பேன் என்று தான் பலமுறை கூறியதாகவும் மாணவன் தான் வற்புறுத்தியதாகவும் மனுவில் குறிப்பிட்டு தனக்கு ஜாமின் கேட்டுள்ளார். மேலும் இந்த மனு தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
