ஹரியானா: குருக்ராமில் 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கிச்சனில் முதல் தளத்தில் உணவு சமைத்து கொண்டிருந்த ராதிகாவை, அவரது தந்தையான தீபக் யாதவ் (வயது 49) பின்னாளிலிருந்து வந்து ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று குண்டுகள் முதுகில், ஒன்று தோளில் பாய்ந்ததால், ராதிகா அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீபக் யாதவை கைது செய்தனர். ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதுக்குப் பிறகு, அவரை நீதிமன்றம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது.

இந்நிலையில், ராதிகாவின் குடும்ப உறுப்பினரனா விஜய் யாதவ் ANI-யிடம் பேசிய போது, “தீபக் என்னிடம் சொல்லியதாவது – “அண்ணா… நான் என் மகளை கொலை செய்துவிட்டேன்… என்னை கொலை பண்ணு!” …’ என வலியோடு சொன்னார். அவர் மனத்தளவில் சீரழிந்த நிலையிலிருந்தார். அவர் போலீஸ் ஸ்டேஷனிலும் இதையே கூறினார் – என்னை தூக்கிலிடுங்கள் என்றார்.

விஜய் யாதவ் மேலும் கூறுகையில், “ராதிகா  சொந்த டென்னிஸ் அகாடமி ஆரம்பிக்கவில்லை. ஆனால் சிறுவயதிலிருந்தே அவருடைய பயிற்சிக்காக தீபக் மிகுந்த அக்கறையுடன் பங்களித்தார். அதிகாலையில் 5 மணிக்கு பயிற்சிக்கு அழைத்து சென்று, மாலை வரை அவரைத் தான் அழைத்து வந்தார். முழு நேர ஒத்துழைப்பு அவர் தர்ந்தார். இந்த குடும்பம் முதற்கட்டத்திலிருந்தே செல்வமாகவே இருந்தது. தந்தை கடுமையாக உழைத்தார். மற்றவர்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்தபோது, இவர்களுக்கு பக்கா வீடு இருந்தது,” என்றார்.

அதேவேளை, போலீசார் தெரிவித்ததாவது, ராதிகா ஒரு டென்னிஸ் அகாடமி நடத்திவந்தார். ஆனால் இந்த அகாடமி சம்பந்தமாகவே தந்தைக்கும் மகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், ‘மகளின் வருமானத்தில் வாழ்கிறார்’ என்ற சமுதாய விமர்சனங்களை எதிர்கொண்டதால் தீபக் யாதவ் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் இந்திய விளையாட்டு உலகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி, குடும்பத் தகராறுகள் எவ்வளவு ஆபத்தான முடிவுகளுக்கு வழிவைக்கக்கூடும் என்பதற்கான வேதனைமிகுந்த எடுத்துக்காட்டு ஆகியுள்ளது.