
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தநிலையில் சம்பவ நாளன்று மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஹாஸ்டல் வார்டன்மாணவனை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவன் அவரது தந்தையிடம் தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் இதுகுறித்து மாணவனிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் ஹாஸ்டல் வார்டனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது வார்டனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரை காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கியதில் தற்போது அவரின் உடல்நலம் தேறி வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.