
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படும் என சமீப காலமாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படாது. அதன் பிறகு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 299 கள்ளர் பள்ளிகளிலும் விதவிதமான சீரமைப்பு பணிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள இணைக்கப்படும் என்று வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளது.