சென்னை கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதே போல கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.