தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, மேடையில் இருக்கும் போது நம்ம ஏபி முருகானந்தம் அண்ணா கேட்டாங்க…  அண்ணன் ரெண்டு பொருத்தம் உங்களுக்கு நம்ம எம்ஜிஆர் ஐயாவுக்கும் இருக்குன்னு சொன்னாரு. அப்போ நான் சொன்னேன்.  எம்ஜிஆர் அய்யாவுடடைய நக தூசு கூட நான் லாயக்கில்லை. இருந்தாலும் ஆச்சரியமான விஷயம் என்னன்னா….

திமுக எம்.ஜி.ஆர் ஐயாவை கிண்டல் பண்ணது வாட்ச்ச வச்சு. அதனால எம்ஜிஆர் அய்யா பாத்தீங்களா …? கடைசி காலம் வரைக்கும்,  ஒரே வாட்ச் கட்டி இருப்பார்.  ஃபுல் ஹேண்ட் ஷர்ட் மேல அந்த வாட்ஸ் கட்டியிருப்பார் புரட்சித்தலைவர் ஐயா. திமுக எம்.ஜி.ஆர் ஐயா கிட்ட என்ன சொன்னாங்கன்னா ?

இந்த வாட்சுக்குள்ள டைமண்ட் இருக்கு. டைமண்ட்டை வாட்சுக்குள்ள ஒளிச்சு வச்சு இருக்காரு. அதுக்கு கணக்கு கொடு. அடுத்து இந்த வாட்ச்,  எல்லாத்தையும் ஒட்டு கேட்கக்கூடிய கருவி இருக்கு. எல்லாத்தையும் ஒட்டு கேட்குறாரு.

இதெல்லாம் கணக்கு கொடு என்றார்கள். அதனால மறுபடியும் நமக்கு ஒரு வாய்ப்பு. இந்த வாட்ச் வைத்து இவுங்க ரெண்டு லட்சம் கோடி ரூபாய்யை  வெளியே கொண்டு வர வேண்டியது என்னுடைய நோக்கம். இதுல  தெளிவா இருங்க. உங்களுடைய பிரதிநிதிகளை இப்படித்தான் கேள்வி கேட்கணும். அதுக்கு நேரம் வந்துடுச்சு என தெரிவித்தார்.