பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிதாக இளம் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மிலன் பல்கலை வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்த இந்த இளம் நட்சத்திரத்திற்கு H.L. டெளரி என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஆண்டுகள் வயதுடைய இந்த இளம் நட்சத்திரத்தில் பூமியில் உள்ளதை விட 3.7 மடங்கு அதிகமாக தண்ணீர் உள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.