லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த திரைப்படம் தமிழக திரையரங்குகளில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. முதல் நாளில் இப்படம் 148 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்சம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் “பல ராஜாக்களை பார்த்தாச்சு டா. நீ ஒரசாம ஓடிடு” என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருப்பது ரஜினியை வம்பிழுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.