அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம உளவு பலூன் தங்கள் நாட்டு வான் பரப்பின் மீது பரந்த காரணத்திற்காக சீனாவை கடுமையாக சாடியுள்ளார். ஆனால் சீனாவோ அது உளவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய ஒரு வின் ஓடம் தான் என விளக்கம் அளித்தது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது.

இதனையடுத்து அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழித்த அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் உளவு பலூன் ராணுவ அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட உலவுப் பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அந்த பலூனையும் அதில் இருந்த சில கருவிகளின் சிதறிய பாகங்களையும் அமெரிக்க விமானப்படை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றது.

இந்த ஆய்வில் அது உளவு பலூன் தான் என்றும் அதனை சீனா அனுப்பியது மிகப்பெரிய சர்வதேச குற்றமாகும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் வான்வெளி பகுதியில் பறந்து கொண்டிருந்த சீன உணவு பலூனை தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டதால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முந்தைய டிரம்ப் ஆட்சியில் இது போன்ற செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சுலிவன் தெரிவித்து உள்ளார்.