உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயணர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ட்விட்டர் பையனர்கள் தங்களால் புதிய டுவிட்களை பதிவிட முடியாமல் அவதிப்பட்டு உள்ளனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து ட்விட்டர் குழு கூறியதாவது “இந்த சிக்கலை பற்றி நாங்கள் அறிந்தோம்.

அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உங்களில் யாரேனுக்கும் ட்விட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை கூடிய விரைவில் சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். என்று தெரிவித்துள்ளது. இதே போன்று பேஸ்புக்கில் பயனர்களின் 12000 கணக்குகளும் instagramல் 7000 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.