ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி20 போட்டிகளை பொருத்தவரையில் அதிரடியாக விளையாடும் ஜாம்பவான் வீரர்களை அபாயகரமான வீரர்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் அபாயகரமான வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஆவார். இவர் லக்னோ அணியில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன்தான் மிகவும் அபாயகரமான வீரர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, பூரனால் வேகப்பந்து மற்றும் சுழற் பந்து என எந்த வகையான பந்துவீச்சுக்கும் டஃப் கொடுத்து அடிக்க முடியும். என்னை பொருத்தவரை தற்போதைய கிரிக்கெட் உலகில் அவர்தான் மிகவும் அபாயகரமான வீரர். ஏனெனில் அவரால் மிகப்பெரிய சிக்சர்களை கூட எளிதாக அடிக்க முடியும். சென்னை மற்றும் லக்னா அணிகள் மோதிய போட்டியின் போது ஸ்டோய்னிஸ் சிறப்பாக விளையாடினார். ஆனால் போட்டியின் பின் வரிசையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவருடைய இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மேலும் பூரனை எப்படி பயன்படுத்தினால் நல்லதோ அப்படி லக்னோ அணி பயன்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.