தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் 53-வது பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு அவர் நடித்த 3 படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

அதன்படி பில்லா, காதல் மன்னன் மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரீலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரீ ரீலீஸ் செய்யப்பட்டு வருவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் அந்த வகையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளில் அவர் நடித்த 3 படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது.