பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிற்குள் ஒதுக்கி வைக்கப்படுவதை மையப்படுத்தி தீட்டு என்கிற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் பெரியாரின் படம் பதித்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. உடலியல் காரணங்களுக்காக பெண்களை ஒதுக்கி வைக்கும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கையை விமர்சித்து தீட்டு பாடல் உருவாகியுள்ளது. மேலும் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.