சென்னை பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் கல்லூரியில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் பயிரும் மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டு டிசம்பர் பருவத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.