அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும்.  இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் மற்றும் CEETAதேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை படிப்புகளான MBA, MCA நுழைவுத் தேர்வாக TANCET தேர்வும், M.E, M.Tech படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வாக CEETA தேர்வும் நடத்தப்படுகிறது. அதற்கான ஹால் டிக்கெட் விலை இன்று முதல் http://tancet.annauniv.edu/tancet/என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.