
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் (24) என்பவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டின் அருகே தனுஷ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தனுஷை சரமாரியாக அரிவாளால் ஓட துரத்தி வெட்டி உள்ளனர். அப்போது இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பரான அருணுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
இந்நிலையில் தனுஷை அரிவாளால் வெட்டியதில் அவருக்கு தலை மற்றும் உடல் என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதில் பலத்த காயம் அடைந்த அருண் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.