கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி நபிஷா பேகம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபிஷா பேகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போக்கும் வழியிலேயே நபிஷா பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.