உத்தரபிரதேசத்தின் ஃபத்தேபூர் மாவட்டத்தில் உள்ள காக்ரேரு காவல் நிலையப் பகுதியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் தனது வயலுக்கு சென்றபோது, அங்குள்ள நீர்ப்பாசன அறையில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது. உடனே அவர் கதவை வெளியே பூட்டி, திருடன் இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். ஆனால், கதவைத் திறந்தபோது, அந்த நபரின் மகன், கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணுடன் இருந்தது தெரியவந்தது.

அதே கூட்டத்தில் பெண்ணின் தந்தையும் உறவினர்களும் இருந்த நிலையில், அந்த பெண் தன்னை கட்டி வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால், அந்த இளைஞனையும் அவரது தந்தையையும் காவல்துறை கைது செய்தது. பெண்ணின் மருத்துவ பரிசோதனை நடைபெற்று அறிக்கையில் துன்புறுத்தல் உறுதியானால், கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று காவல் நிலைய அதிகாரி வித்யா பிரகாஷ் சிங் தெரிவித்தார். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.