இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 118 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே நிதானமாகவும் உறுதியுடனும் விளையாடியது.
இந்திய அணியின் வெற்றிக்கு, இளம் வீரர் அபிஷேக் சர்மா 35 ரன்கள் எடுத்து வலு சேர்த்தார். அவருடன் இணைந்து சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இந்திய அணி 15.5 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றியது.
