2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், இளம் வீரரான ரஃபேல் ஜோடார், மைதானத்தில் இருந்த பந்து பொறுக்கும் சிறுமியைத் தள்ளிவிட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
போட்டி நடைபெறும் போது, பந்து பொறுக்கும் சிறுமி ஒருவர் தவறி விழுவதைப் போன்ற காணொளி வைரலானதைத் தொடர்ந்து, ஜோடாரின் நடத்தை குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
Tennis player Rafa Jodar pushed a ball girl at Roland Garros viral clip captures the moment she stumbles back from his arm gesture, sparking major backlash. pic.twitter.com/nwaMwN3r90
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 30, 2026
“>
இருப்பினும், தான் சிறுமியைத் தள்ளவில்லை என்றும், மைதானத்தின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பொருளில் தடுமாறியே அவர் விழுந்தார் என்றும் ஜோடார் விளக்கமளித்துள்ளார்.
பந்து பொறுக்கும் சிறுமிகளின் கடினமான உழைப்பை தான் மதிப்பதாகவும், வேண்டுமென்றே யாரையும் காயப்படுத்த மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும், அவரது விளக்கத்தை ஏற்க மறுக்கும் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
