அமெரிக்காவின் பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேபால் அமைந்துள்ளது இந்நிலையில் பேபாலின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் உலகளாவிய நம் ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்பது சதவீதம் குறைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தின் வர்த்தகத்தை சரியான அளவில் சரியான வேகத்தில் கொண்டு சென்று பயனர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை அழித்து வருவாயை அதிகரிப்பதற்கே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளார்.