பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். தோஷகானா வழக்கில் (அரசு பரிசுகள்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது சட்டவிரோதமாக அரசு கருவூலத்தில் (தோஷாகானா) இருந்து விலையுயர்ந்த பரிசுகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று பணமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சவுதி இளவரசரிடம் இருந்து குறைந்த விலையில் நகை வாங்கி ஆதாயம் அடைந்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னதாக அரசு ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.