சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் ஒரு வாலிபர் தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு, கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிளை விற்க நேரிட்டபோது, அதைப் பிரிய மனமில்லாமல் தேம்பித் தேம்பி அழுகிறார்.

மேலும் அந்த வாகனம் அவருக்கு வெறும் ஒரு இயந்திரம் மட்டுமல்ல, அவரது பல ஆண்டுகால கடின உழைப்பின் அடையாளமாகவும், உணர்வுப்பூர்வமான பிணைப்பாகவும் இருந்துள்ளது என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது. அந்த இளைஞர் தனது பைக்கைத் தடவிக்கொடுத்து விடைபெறும் காட்சி, உழைத்து முன்னுக்கு வர நினைக்கும் ஒவ்வொரு நடுத்தர வர்க்க மனிதனின் வலியையும் பிரதிபலிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Terms of India (@termsofindia)

“>

இதனால் நிதி நெருக்கடி அல்லது ஏதேனும் கட்டாயச் சூழல் காரணமாகத் தனது கனவு வாகனத்தைப் பிரிந்து செல்லும் அந்த இளைஞரின் வேதனை, இணையதளவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “பணம் வரும் போகும், ஆனால் வியர்வை சிந்தி வாங்கிய பொருளை இழப்பது என்பது ஒரு துண்டு இதயத்தை இழப்பதற்குச் சமம்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பார்த்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.