இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பலரது மனதை வென்றுள்ளது. டெல்லியில் போக்குவரத்து நெரிசலான ஒரு சாலையில், மாருதி சுஸுகி எர்டிகா கார் பழுதாகி நின்றதைக் கண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் உரிமையாளர் , உடனடியாகத் தனது சொகுசு காரிலிருந்து கீழே இறங்கி வந்து உதவி செய்துள்ளார்.
சுமார் 78 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள சொகுசு காரில் வந்தாலும், எந்தவித கர்வமும் இல்லாமல் சாலையில் நின்ற காரைத் தள்ளிக் கொண்டு போய் வழிவிட்ட அவரது செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. “மெர்சிடிஸ் கார் அல்ல, மனிதநேயமே இங்கே பிரகாசிக்கிறது” என இந்த வீடியோவைப் பகிர்ந்தவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வழக்கமாகச் செல்வந்தர்கள் மற்றவர்களுக்கு உதவத் தயங்குவார்கள் என்ற பிம்பத்தை இந்தச் சம்பவம் உடைத்துள்ளதாக இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
“அவர் மெர்சிடிஸ் காரில் பயணிக்கத் தகுதியானவர்” என்றும், “பணம் இருப்பதை விடப் பணிவாக இருப்பதுதான் பெரிய விஷயம்” என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உதவி தேவைப்படும் இடத்தில் தயங்காமல் முன்வந்த அந்த நபரின் மனிதாபிமானம் இப்போது வைரலாகி வருகிறது.
